ஏதோ விரக்தியோடு ஆரம்பிக்குதேனு நினைக்காதீங்க....வாழ்ந்து தானே ஆகனும்.நல்லா வாழ முயற்சி பண்ணலாமே..பண்ணலாம்....
Saturday, November 27, 2010
Wednesday, November 24, 2010
உண்மை Vs நம்பிக்கை
ஒரு தாய் தன் குழந்தையை பார்த்து இது தன்னுடைய குழந்தை என்று சொன்னால் அது உண்மை....
ஒரு தகப்பன் தன் குழந்தையை பார்த்து இது தன்னுடைய குழந்தை என்று சொன்னால் அது நம்பிக்கை...
சேலம் . ஜெ.வினோத்கண்ணன்
ஒரு தகப்பன் தன் குழந்தையை பார்த்து இது தன்னுடைய குழந்தை என்று சொன்னால் அது நம்பிக்கை...
சேலம் . ஜெ.வினோத்கண்ணன்
Monday, November 22, 2010
சிந்திப்போம் சில நொடிகள்...
நண்பர்களே.,சிந்திப்போம் சில நொடிகள்....
நமது நாடும்.நமது சமுதாயமும் செல்லும் வழியில் நம் செல்ல முடிகிறதா நண்பர்களே.நமது நாட்டில் சேவைகளாக நம் நினைக்கும் துறைகளை ஒருசில நிமிடமாவது நாம் நினைக்கிறோம,என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அத்யாவசியமான,மிகமுக்கியமான நமது கல்வித்துறையை பார்க்கிறீர்கள் தானே.பணம் இருந்தால்,அதுவும் நம்மைப்போல் சராசரி மனிதர்களால் சமாளிக்க இயலாத அளவில் மட்டுமே கல்வித்துறை இருக்கிறது.அதிலும் நம்மைப்போல சராசரி இனத்தவர்களுக்கே உரித்தான பிரஸ்டீஜ் கடன் வாங்கியாவது பெயர் சொல்லும் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு படும் அல்லல்களை சொல்லவும் இயலாமல்,மெல்லவும் இயலாமல் வட்டி கட்டி கட்டியே நிம்மதி இல்லாமல் மைந்து போகிறோம்.
எதற்கு நாம் குழந்தைகளாவது நன்கு படித்து நல்லபடியா வாழனும் என்றைய ஆசையால்.அந்த ஆசைக்கும் விழும் அடிதான் சமுதாய ஒழுக்கக்கேடு.
அதேபோல் இன்னொரு துறை மருத்துவம்.அது ஒன்னே நம்மை போல சராசரி மனிதர்களின் சம்பாத்தியத்தை முழுவதுமாக அறிக்கை.நன்றாக படிப்பவர்களே இந்த உயிர் காக்கும் தெய்வீக சேவையை செய்ய முடியும் என்ற நோக்கத்திலே தான் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே படிக்கும் நிலை இருந்தது.ஆனால் இப்போது அப்படியா.இல்லை கோடி கோடியாக கொட்டி மாடமாளிகை போல மருத்துவமனை கட்டிவிட்டு சும்மாவா அதை விட முடியும்.பல லட்சங்களை கொடுத்தாவது தான் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்கி விடுகிறார்கள்,அவர்களுக்கு அதில் ஈடுபாடு இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி.பணம் கொடுத்து வாங்கிய பட்டமல்ல அதன் செயல்பாடு எப்படி இருக்குமென நாம் நினைத்தால் புரியும்.
அடுத்து ஆன்மிகம்.இதுபோல் ஒரு நல்ல துறையும் இல்லை,மோசமான துறையும் இல்லை.யார் வேண்டுமானாலும் சம்பாரிக்க நினைத்தால்,சும்மா இருந்துகொண்டு சம்பாரிக்க நினைத்தால்,மற்றவர்களை சுலபமாக ஏமாற்ற தெரிந்தால்,நமது உண்மையான ஆயிரக்கணக்கான மகான்களின் சில சொற்களையும்,செயல்களையும் மனனம் செய்ய தெரிந்தால்,சில பண ஆசைகொண்ட சோம்பேறிகள் சீடர்களாக கிடைத்து விட்டால் போதும் நாமும் சாமியாராகி விடலாம்.
நமது பண்டைய மகான்களின் வாழ்க்கை முறையும்,அவர்களின் தத்துவங்களும்,அவர்களின் உயரிய நோக்கமும் இப்போது உள்ள சாமியார்களிடம் இருக்கிறதானு நினைத்து பாருங்கள்.இப்பவும் உண்மையான சாமியார்கள் இருக்கலாம்,ஆனால் அவர்களின் நோக்கம் என்னனு தெளிவா சொல்ல மறுக்கிறார்கள்.
அனைத்து சாமியார்களும் அன்பு,அமைதி,தன்னையே அறிதல்,கோவத்தை குறைத்தல்,எல்லா உயிர்களிடமும் ஒற்றுமை பேணுவது போன்ற பண்டைய மகான்களின் நோக்கங்களையே சொல்கின்றனர்.அப்படி இருக்கும் போது நமது நாட்டில் எத்தனை ஆயிரம் சாமியார்கள் இருக்கின்றனர்.அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா,அவர்களின் நோக்கம் ஒன்று தானே,பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் அமைதிக்கும்,அன்புக்கும் பாடுபடலாமே.?
ஏன் தனித்தனியாக சீடர்களை அமர்த்திக்கொண்டு,கற்பனைக்கு எட்டாத அளவில் மாட மாளிகைகள் கட்டிக்கொண்டு,எளிமை என்ற சொல்லுக்கு அர்த்தமே தெரியாமல் பகட்டாக,எதோ அவர்கள் தான் கடவுள் போன்று மாய தோற்றத்தை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு,உலக கோடிஸ்வரர்கள் கூட சம்பாதிக்க முடியாத கருப்பு பணத்தையும்,போலி புகழையும் உருவாக்கிக்கொண்டு தான் நம்மை அமைதியாகவும்,அன்பாகவும் வாழ வைக்க வேண்டுமா.?
வள்ளலார்,திருமூலர்,திருவள்ளுவர் போன்ற மகான்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா.?இவர்களால் யார் யார் பயன் பெறுகிறார்கள்,நம்மை போன்ற சராசரி மனிதர்களா.இல்லவே இல்லை.ஏமாற்றுவதை மட்டுமே தொழிலாக கொண்ட சில அரசியல்வாதிகள்,ஏமாற்றியே சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட தொழிலதிபர்கள்,நாகரீகம் என்ற போர்வையில் மாயையாக வாழும் பணக்கார மகளிர்கள் மட்டுமே இந்த ஹை டெக் சாமியார்களால் பயன் பெறுகிறார்கள்.
அவர்களுக்கு தான் கோவமே வராதே,அன்பை மட்டுமே மூச்சாக கொண்டவர்களே,அமைதியை மட்டுமே கொள்கையாக கொண்டவர்களே,அப்படி இருக்க ஏன் சாமியார்களான,முற்றும் துறந்த மனிதர்களான அவர்களே ஒற்றுமையாக இருக்காமல்,எதோ தனித்தனி நாட்டு அரசர்கள் போல தோரணையாக வாழ்கின்றனர்,அதுவும் நோயோடு,பல கெட்ட பழக்கங்களோடு.
நமது மனம் மாறிவிட்டது.நமது உழைப்பும் மங்கிவிட்டது.நமது உண்மையும் தூங்கிவிட்டது.நமது மனசாட்சியும் அழிந்துவிட்டது.ஆனால் தேவைக்கும் ரொம்ப அதிகமான பொன்,பொருள்,பணம்,புகழ்,சொத்துக்கள்,தொழில்கள்,வருமானங்கள்,பெண்கள் போன்றவைகள் எல்லாமும் தானாக கிடைக்கவேணும்,இல்லாவிட்டால் எவனையாவது ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும்.இப்படி ஆகி விட்டது நமது வாழ்க்கை முறை.
மாதம் முழுதும் சம்பாதித்தால் கிடைக்கும் சம்பளம் சில செயல்களுக்கு கொடுக்கும் கிம்பலத்துக்கே பத்தாது என நினைக்க மட்டுமே நம்மால் முடியும்.அப்படி இருக்க நாம் எப்படி சாமியார்களுக்கு பணிவிடை செய்ய முடியும்,அதுவும் அதிக பணம் செலவு பண்ணி.உண்மையான சாமியார்களை அறிய முற்படும் முன் நாம் எண்ணங்களையும்,செயல்களையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.அப்போது தான் நாமும்,நம்மை சார்ந்தவர்களையும் சிறிதளவேனும் அமைதியாகவும்,சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
இருப்பதை கொண்டு சிறப்பாக வாழவும்,நாம் உண்மையாக சம்பாதிக்க ஆன முயற்சிகளை எடுப்பதும்,உண்மையாகவும் ,சிறிதளவு இரக்கத்துடனும்.கொஞ்சம் மனிதாபமானதுடனும் இருந்தால் மட்டுமே நாம் அமைதியாகவும்,நிம்மதியாகவும் வாழ முடியும் என்பதை உணரவேண்டும்.அப்படி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.பிறகு எதற்கு சாமியார்கள் நமக்கு நாமே சாமிகள்.
கொங்கு..
கொங்கு மண்,கொங்கு நாடு,கொங்கு பூமி,கொங்கு தமிழ்,கொங்கு பரம்பரை,கொங்கு கலாசாரம்,கொங்கு பழக்கவழக்கம்,கொங்கு வீரம்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
தீரன் சின்னமலை,காளிங்கராயன் போன்ற உன்னதமான தலைவர்களை தன்னகத்தே கொண்டது.
அனால் இப்போது கொங்கு பூமி என்று அழைக்கப்படும் இந்த ஏரியாவில் கொங்கு மக்களுக்கு எதிரிகள் கொங்கு மக்களே.அடுத்தவர்களை,அதுவும் தன் மாமன் மட்சனன்,பங்காளிகள் என்று அழைக்கப்படும் தனது சொந்தங்களையே தன்னை விட உயர்ந்துவிடக்கூடாது என்பதிலும்காட்டும் அக்கறை ,முஸ்லிம்கள்,வடமாநிலத்தவர்கள்,வேற்று மத மற்றும் சாதி மக்களுக்கு கொடுக்கும் மரியாதையும்,உதவியையும் தனது கொங்கு இன தாழ்ந்த மக்களுக்கு கொடுக்க மறுப்பதும்.மிகப்பெரிய கொங்கு முதலாளிகள் தனது சமுதாயத்தையோ,தனது இனத்தையோ கண்டுக்காமல் ஏதோ இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தன் மட்டும் வாழ்வது போல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது...
அதே போல் கொங்கு சமுதாயத்தில் ஒற்றுமை என்னும் சொல்லுக்கு ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை என்பதும் உண்மை.
உண்மையில் இதே நிலையில் கொங்கு சமுதாயம் செல்லுமேனாகில் அதன் வரலாறு மட்டுமே மிஞ்சும்.
கொங்கு.த.மூர்த்தி.

(1)கன்னிப்பையன் கதை
வேல்.ஆம் நமது நாயகன்.அவனது பிறப்பில் அவனுக்கு ஓர் அற்புத உலகம் அமையபோகிறது என்பதை அவனது குடும்பத்தினரும் உணரவில்லை,உலகத்தினரும் உணரவில்லை.அப்படி பிறக்கும் போதே புதிர்களின் மொத்த உருவமாக பிறந்தான்.அவனது ஆரம்ப கால நாட்கள் அவனுக்கு மறக்க நினைக்கும் மங்காத நாட்களே.
அவனது தந்தை ஓர் சாராய வியாபாரி.நீங்கள் நினைப்பதைப்போல் சினிமாவில் வரும் வியாபாரி அல்ல.நேரம் காலம் இல்லாமல் குடித்துவிட்டு,எதிர்காலத்தை பற்றி எந்த சிந்தனையும் இன்றி,உடல்நலத்தில் ஒருதுளி கூட அக்கறையின்றி,குடும்பத்தை பற்றி கவலையின்றி வாழ்ந்த ஓர் உண்மையான மனிதர்.
அவனது தாயோ படிப்பறிவு சிறிதுமின்றி கூலி வேலை செய்து,குடிகார கணவனுடன் குதூகலமின்றி குடும்பத்தை ஒட்டிய ஓர் உத்தமி.
வேல் படிப்பதில் கெட்டிக்காரன்,ஆனால் அவனது குடும்ப சூழல் அவனை படிப்பதில் அவ்வளவாக ஈடுபடுத்தவில்லை.ஆனாலும் படித்தான்.அவனது ஆரம்பக்கல்வி அவனது சிறு கிராமதிலேயே ஆரம்பித்தது.அவனது தலைஎழுத்து தெரியாமல் போனாலும்,அவன் கையெழுத்து அழகாக இருந்தது,அவனது வாழ்க்கையை தவிர.அவனது முதல் தன்னம்பிக்கை உணர்வு,அந்த பள்ளியில் பணிபுரிந்த சமையல் டீச்சர் மூலம் அடைந்தான்.பள்ளி அறையை கூட்டும்போது அவனின் உண்மையான,ஈடுபாட்டான செயலை பார்த்து நீ வாழ்க்கையில் முன்னேறுவாய் என்று மனதார பாராட்டினார்.
இப்படியாக சென்று கொண்டிருந்த இவனது படிப்பில் இவனது தந்தையோ,தாயோ கவனிக்கவில்லை,அவர்களுக்கு கவனிக்கும் அளவுக்கு தெரியவில்லை.தனது வயதொத்த சிறுவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது என்பதும் இவனுக்கு அவ்வளவாக வாய்க்கவில்லை.அதற்கு முக்கிய காரணம் இவனது சாதிக்காரர்களில் வயல்வெளி,கால்நடைகள்,விசாலமான வீடு,நெருங்கிய சொந்தபந்தம் இவனது குடும்பத்துக்கு கடுகளவும் கிடையாது.
அப்படி இருக்க இவனது வயதை ஒத்த சிறுவர்கள் விடுமுறை நாட்களில் அவர்களின் வயல்வெளியிலும்,அவர்களின் கால்நடைகளை பராமரிப்பதிலும்,அவர்களின் சொந்தபந்தங்களின் வீடுகளுக்கும்,விஷேசங்களுக்கும் சென்று பொழுதை களிப்பார்கள்.ஆனால் நமது நாயகனுக்கு அந்த கொடுப்பினை இல்லை.
அதனால் அவனின் விடுமுறை நாட்கள் அவனது அருகில் உள்ள வேற்று சாதிக்காரர்களின் குடும்பத்துடனும்,அவனின் குடும்ப நிலையை ஒத்த வசதி இல்லாத குடும்பத்துடன் பழகி ஏதோ அவனது வாழ்க்கையை ஓட்டினான்.
அப்படி பழகிய ஓர் சிறுமியின் பெயர் செல்லம்மா.அவனுக்கும் ,அவளுக்கும் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு.அவளின் வீட்டிலேயே கலி சாப்பிடுவதும்,அவளுடன் விளையாடியும் பொழுதை நிம்மதி இல்லாமலே கழித்து வந்தான்.
வேலனுக்கு சிறு வயது முதலே காமத்தில் சிறு ஈடுபாடு.அப்பவே எட்டு வயதிலேயே அவன் அவன் தோழியுடன் அம்மா,அப்பா விளையாட்டு விளையடுவான்ன பாத்துக்கங்களே.அதையும் ஒரு முறை அவனின் அம்மா பார்த்து விட்டதால் அதோடு அவர்களின் உறவும் அறுந்துவிட்டது.
அவனது ஆரம்பக்கல்விக்கு பெரிதாக செலவு இல்லை.உடைகள்,காலணிகள்,மதிய உணவு ஆகியவைகள் பள்ளியிலே தந்துவிட்டனர்.தேவையான சிலேடு,சில நோட்டுகள் மட்டும் அவனது சித்தப்பா வாங்கிக்கொடுப்பார்.அவனது அம்மா தன் விவசாய கூலி காசில் பென்சில்,மிட்டாய் வாங்க கொஞ்சம் தருவாள்.மற்றபடி பொங்கல்,தீபாவளி,உள்ளூர் பண்டிகைகள் போன்ற விஷேசமான நாட்களில் அவனுக்கு கிடைப்பது அன்று மட்டும் அவனது அம்மா சுட்டு தரும் இட்லி மட்டுமே அவனது பண்டிகைகால கொண்டாட்டம்,அதுவும் அவன் தந்தை போதை இல்லாமல் இருந்தால் மட்டுமே.அந்த பண்டிகை நாட்களில் அவனை ஒத்த சிறுவர்,சிறுமிகள் அவர்களின் சொந்தபந்தங்களின் வீட்டுக்கு சென்றுவிடுவர்.இவனுக்கு தன் அதுவும் இல்லையே.
எப்படியோ அவனுக்கும் நினைவு தெரிந்து ஐந்து வருடம் ஓடியது.அப்போதே அவன் கனவு கண்டுகொண்டிருப்பான்.அவனது தந்தை சாராயம் குடிக்காமல் இருப்பது போலவும்,அவனது அம்மாவை அடிக்காமல் இருப்பது போலவும்,இவனிடம் கொஞ்சி பேசுவது போலவும்.என்ன பண்ண அவன் கனவு நிறைவேற ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.....
(மீண்டும் வேலனை காண்போம்....)

கன்னிப்பையன் கதை... (அறிமுகம்)
அன்புள்ள நண்பர்களே.....எனது தேடல்களுக்கும்,என் மன ஆறுதலுக்கும்,என் சிந்தனைகளுக்கும்,எனது ஆத்மார்த்தமான நிம்மதிக்கும்,நன் நினைத்ததை சொல்ல ஒரு வடிகாலாக உங்களை நினைக்கிறேன்....அதனால் எழுத முயல்கிறேன்...
இந்த கதையில் வரும் நாயகனின் பெயர் வேலு.நாயகிகளின் பெயரை சொல்ல இயலாது,அவ்ளோ பேர் அவனுக்கு.இது சில கதைகளைப்போல் அல்லாமல் சிறிது மாறி வரும்...படித்துப்பார்த்துவிட்டு சொல்லுங்கள் உங்கள் விமரிசனங்களை...
நன்றி....

பங்குசந்தை
உங்களுக்கு தேவையான பங்குசந்தை தகவல்கள்,உங்களுக்கு புறிகிரமாதிரி தரும் எனக்கு தெரிந்த ஒரு இடம்..http://mayashare.blogspot.com/
Sunday, November 21, 2010
எனக்குப்பிடித்தது...
கடவுள் ஆதிசிவன்
குரு திருமூலர்
மனிதர் கலாம்
தலைவர் காமராஜர்
இயக்குனர் பாலா,சசிகுமார்
இசையமைப்பாளர் இளையராஜா
குரு திருமூலர்
மனிதர் கலாம்
தலைவர் காமராஜர்
இயக்குனர் பாலா,சசிகுமார்
இசையமைப்பாளர் இளையராஜா
என்னை பற்றி...
நண்பர்களே...
என்னைப்பற்றி சொல்ல ஒன்னுமில்லைனும் சொல்லவில்லை,எதாவது இருக்குனும் சொல்லவில்லை.
எனக்கு தெரிந்ததை அறிந்ததை சொல்கிறேன்,உங்களுக்கு பிடித்தால் சொல்லுங்கள்,இல்லையெனிலும் சொல்லுங்கள்....
உங்களை சந்திக்கிறேன்...

Subscribe to:
Comments (Atom)